உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்- இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து தோல்வியை தழுவினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்- இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி
x
சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான கரோலின் மரினை, சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில்  19-21,10-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வியை தழுவினார். 

இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளி வென்றார். மேலும் இந்த தொடரில் 4 முறை பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பி.வி.சிந்து பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்