நடைபயிற்சிக்கு சென்ற அமைச்சரின் செல்போன் பறிப்பு - உடந்தையாக இருந்த 3 பேரிடம் விசாரணை

புதுச்சேரியில் அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற கும்பல் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு உதவிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நடைபயிற்சிக்கு சென்ற அமைச்சரின் செல்போன் பறிப்பு - உடந்தையாக இருந்த 3 பேரிடம் விசாரணை
x
புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சில தினங்களுக்கு முன் கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்ற போது  அவரது செல்போனை மர்ம நபர்கள் இரண்டு பேர் பறித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், முதலியார்பேட்டையை சேர்ந்த செந்தில் மற்றும் பாலா ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களுக்கு உதவியதாக 3 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சரிடம் இருந்து பறிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை வில்லியனூரில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றது தெரியவந்ததால் அதனை போலீசார் மீட்டனர். செல்போனை பறித்துச் சென்ற பாலா மற்றும் செந்திலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்