மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
x
மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி  டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட ராம்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை  மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பல வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அசம்கான் உள்ளிட்ட மூவருக்கு  சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணைக்கு  ஆஜராகாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. எந்த வழக்கிலும் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், 3 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்