காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.
x
காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வன்முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழு  கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்