உள்துறை அமைச்சர் அமித்ஷா , கெஜ்ரிவால் சந்திப்பு - டெல்லி கலவரம் தொடர்பாக ஆலோசனை

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா , கெஜ்ரிவால் சந்திப்பு - டெல்லி கலவரம் தொடர்பாக ஆலோசனை
x
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர தேவைப்பட்டால் ராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்