"பொங்கல் பரிசை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய திமுக" - வைகைசெல்வன்

"உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசு"
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடனானஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்வது எப்படி? என்பது குறித்து அவர்கள் ஆலோசனை செய்தனர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முடியாமல் போனதை அடுத்து, நீதிமன்றத்தின் மூலம் பொங்கல் பரிசை திமுக தடுத்து நிறுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்