தேசிய குடிமக்கள் பதிவேடு : "உயிரிழந்தவர்களுக்கு யார் பொறுப்பு?" - மம்தா ஆவேசம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நினைத்து பயந்து, இதுவரை 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு : உயிரிழந்தவர்களுக்கு யார் பொறுப்பு? - மம்தா ஆவேசம்
x
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக கொல்கத்தாவில் அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, பேரணியில் பங்கேற்றார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நினைத்து பயந்து, இதுவரை 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார். மேலும், நாம் உடுத்தும் உடையை வைத்து நம்மை கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், குல்லா அணிவதால் மட்டுமே ஒருவர் இஸ்லாமியர் ஆகிவிட முடியாது என்றும்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்