"ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்?" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற மாற்று கட்சி தலைவர், தான் ஒருவராக தான் இருக்க முடியும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கில் கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் உள்​ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதா தமக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்