"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது - வெங்கையா நாயுடு
x
புனேயில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய வெங்கையா நாயுடு, நாம் பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் கருதும் சூழலில், சமீபத்திய சம்பவங்கள் வெட்கக்கேடானது என்றார். அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவால் இன்று, என்றும், இந்த அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு சபதம் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதை நினைவுகூர்ந்த வெங்கய்ய நாயுடு, ஆனாலும் பிரச்சினை தீர்க்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். சமூக தீமைகளை கொல்வதற்கு மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார். குற்றங்களின் தலைநகராக இந்தியா மாறி வருவதாக சிலர் பேசுவதை சுட்டிக்காட்டிய வெங்கய்ய நாயுடு, நாட்டை யாரும் இழிவுபடுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்