"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான வழக்கு வாபஸ்" - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை ஆரே மெட்ரோ போராட்டத்தின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான வழக்கு வாபஸ் - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
மும்பை ஆரே மெட்ரோ போராட்டத்தின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மெட்ரோ ரயில் நிலைய கார் பார்கிங் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் வெட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடினர். இதனையடுத்து போராடியவர்கள் மீது பா.ஜ.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிலையில், ஆரே கார் பார்கிங் பணி நிறுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். தற்போது போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்