"புதுவை அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார் துணை நிலை ஆளுநர்" - மக்களவையில் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணைநிலை ஆளுநர் செயல்படவிடாமல் தடுப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுவை அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார் துணை நிலை ஆளுநர் - மக்களவையில் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
x
புதுவையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணைநிலை ஆளுநர் செயல்படவிடாமல் தடுப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு வாசிகள் உரிமை குறித்த மசோத மீது மக்களவையில் தயாநிதிமாறன் பேசினார். அப்போது அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு அந்த இடத்தை வழங்கிவிடலாம் என்று கூறினார். இதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். டெல்லியைப்போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை துணைநிலை ஆளுநர் செயல்படவிடாமல் தடுப்பதாகவும் அவர்  குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்