மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு

மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு
x
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் தாக்கரே குடும்பத்தில் முதலமைச்சராகும் முதல் நபர் என்ற பெருமையை உத்தவ் தாக்கரே பெற்றுள்ளார்.  

செவ்வாய்க்கிழமையன்று, மும்பையில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்,  கூட்டணி தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.  இதன் மூலம், தாக்கரே குடும்பத்தில் முதலமைச்சராகும் முதல் நபர் என்ற பெருமை,உத்தவ் தாக்கரே பெற்றுள்ளார். இதை தொடர்ந்து 3 கட்சிகள் இடையே கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் முதலமைச்சராக வருவேன் என நினைத்து கூட பார்த்தது இல்லை என்று கூறியுள்ளார். இதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட மற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். 

நான் மட்டும் அல்ல நீங்கள், எல்லோரும் முதலமைச்சர்கள் தான் என்றும், நான் எதற்கும் அஞ்சவில்லை, பொய் என்பது இந்துதுவாவின் அங்கம் அல்ல என்றும் உத்தவ் தாக்கரே கூறினார். தேவேந்திரபட்னாவிஸ்சின் அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன் என்றும், விவசாயிகளின் நலன்காக்க பல திட்டங்களை கொண்டு வருவேன் என்றும் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.

சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மராட்டிய மாநிலத்தை உருவாக்குவோம் என்றும் உத்தேவ் தாக்கரே கூறினார். இதனிடையே எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்ட நிலையில், வரும் ஒன்றாம் தேதி,   பதவியேற்று கொள்வார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்களை சந்தித்த  மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்த பின், பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்