"ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா பயணம் : சென்னை விமானநிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்த அதிமுகவினர்"

முதலமைச்சரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்
x
வெளிநாடுகளில் இருந்து  முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில்,  துணை முதல்வர் பன்னீர்செல்வம் 10 நாள் அரசு முறைப்பயணமாக இன்று அதிகாலையில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சிகாகோ, நியுயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்ட உள்ளார். அமெரிக்கா செல்வதற்காக, அதிகாலை சுமார் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுகவினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். பன்னீர் செல்வத்துடன் நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்டோரும் அமெரிக்கா சென்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்