போக்குவரத்து காவல்துறை வழங்கும் அபராத ரசீதில் தமிழ் இடம்பெறவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு

போக்குவரத்து காவல்துறை வழங்கும் அபராத ரசீதில், தமிழ்மொழி இடம்பெறாததை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
போக்குவரத்து காவல்துறை வழங்கும் அபராத ரசீதில், தமிழ்மொழி இடம்பெறாததை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டியில் நடந்த திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஸ்டாலின் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்