"நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட தொடங்கி உள்ள நாம், நாட்டில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே உள்ளது என்ற கேள்வியை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
x
காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட தொடங்கி உள்ள நாம், நாட்டில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே உள்ளது என்ற கேள்வியை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டில் சகோதரத்துவம் செத்துவிட்டதாகவும், சகோதரத்துவத்தை  சாதி மற்றும் மதவெறி பைப்பற்றியது போல சூழ்நிலை தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமத்துவம் என்பது தொலைதூர கனவாக மாறியுள்ளது என்றும், இந்தியர்கள் இடையே தற்போது ளர்ந்து வரும் சமத்துவமின்மையை எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுவதாகவும், அவரது சார்பில் குடும்பத்தார் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலவீனமாக ஒளிரும் ஒரே சுடராக தற்போது சுதந்திரம்  காணப்படுவதாகவும், அது பிரகாசிக்குமா அல்லது மங்குமா என்பதை காலம் தான் வெளிப்படுத்தும் எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்