மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் - அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் - அக்டோபர் 21ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு
x
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவி காலம் நவம்பர் 9ஆம்  தேதியுடனும் அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2ம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் அக்டோபர் 21ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாநிலங்களில் வருகிற 23ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்