"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபருடன் நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்ற வழக்குகள், வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் போன்ற காரணங்களால், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தப்படாததால் நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில்  தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து விட்டதாகவும், அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்