பெங்களூரு : டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முறைகேடாக சம்பாதித்து, சொத்துக்களை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் D.K. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பெங்களூரு : டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
x
முறைகேடாக சம்பாதித்து, சொத்துக்களை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் D.K. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான சிவக்குமார், அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில், ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த சூழலில், வருகிற 12 ம் தேதி, விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐஸ்வர்யாவுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று,  சம்மன் நோட்டீஸை, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர்

Next Story

மேலும் செய்திகள்