புதுச்சேரி: இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு

புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
x
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன்,  இலவச அரிசி வழங்குவதற்கு நிதி ஒதுக்கிய பின்னரும்,  அரிசியும் வழங்காமல், பயனாளிகளுக்கு பணத்தையும் அளிக்காமல் அரசு ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். துணை நிலை ஆளுநரும், முதல்வரும் சேர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அன்பழகன் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்