ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
x
இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பொருளாதார வீழ்ந்துள்ளதாக நிதி ஆயோக் துணை தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார். இந்நிலையில், ஒரே நாடு, ஒரே கொடி என்ற போர்வையில் மோடி செல்வதாக நல்லகண்ணு தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்ற எதிர்க் கட்சியினரை திருப்பி அனுப்பியது கண்டிக்கத் தக்கது என்றார். தஞ்சை டெல்டாவில், வேதாந்தா போன்ற நிறுவனங்கள் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் நல்லகண்ணு வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்