370 ரத்து விவகாரத்தில் சிறப்பாக பேசினீர்கள் - வைகோவுக்கு மன்மோகன் சிங் புகழாரம்

சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்த விவகாரத்தில், சிறப்பாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டியுள்ளார்.
370 ரத்து விவகாரத்தில் சிறப்பாக பேசினீர்கள் -  வைகோவுக்கு மன்மோகன் சிங் புகழாரம்
x
சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்த விவகாரத்தில், சிறப்பாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். அப்போது, வைகோவை தனது தம்பி என கூறிய மன்மோகன் சிங், தங்களைப் போன்ற தலைவரை பார்க்க முடியாது என்றும் தெரிவித்ததாக மதிமுக இணைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவை, தமது குடும்பத்தில் ஒருவர் என்று கூறியதாக தெரிவித்துள்ள செய்தியில், குடும்பத்துடன் அவரை விருந்துக்கு அழைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பேசிய வைகோ, காங்கிரஸை கடுமையாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்