அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்

அணை பாதுகாப்பு மசோதா 2019 குறித்து மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை ரவிகுமார் எம்.பி. அளித்துள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்
x
அணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டமாக்க  மத்திய அமைச்சரவை  முடிவெடுத்துள்ளது. ஒரு மாநிலத்தின் சார்பில் வேறொரு மாநிலத்தில் அணை ஏதுமிருந்தால் அதை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரவிகுமார் எம்.பி., இதுகுறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளார். அதில், தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்து, பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா தமிழகத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வழிவகுக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்