அரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி, அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
அரசின் சார்பு நிறுவனங்களில் நிதி எடுத்த அமைச்சர்கள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு
x
புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலக தேவைக்கான பொருட்களை அவர்கள் பதவி வகித்து வரும் நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்று வருகின்றனர்.தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் இந்த தகவலை பெற்ற சமூக ஆர்வலர் ரகுபதி, இதனால் அரசு நிறுவனம் பாதிக்கப்படுவதாக கூறி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட கிரண்பேடி, சட்டவிதிகளை மீறிய அரசு அதிகாரிகள் இதற்கு பதில் கூற வேண்டும் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்