பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
x
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு, காவிரி விவகாரம், நீட் தேர்வு விலக்கு, அணு கழிவு மையத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு ஆதரவாக தங்களால் முயன்ற அளவில் நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்போம் என உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்