ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லையா? - பிரதமரின் கருத்துக்கு கேரள அமைச்சர்கள் மறுப்பு

கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அம்மாநில அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லையா? - பிரதமரின் கருத்துக்கு கேரள அமைச்சர்கள் மறுப்பு
x
கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என  பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அம்மாநில  அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குருவாயூரில் பிரதமர் நரேந்திரமோடி பேசியது தொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா இணைந்துள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தில் கேரளாவில் இருந்து 17 இலட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார். இதே போல் கேரள நிதித்துறை அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்கும் பிரதமரின் பேச்சை விமர்சித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களை பிரதமர் மோடி கூறியதாகவும், இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு கேரள அரசிற்கு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்