தமிழகத்தில் இந்தி திணிப்பது உறுதியானால் போராட்டம் நடத்துவோம் - எம்.பி. திருமாவளவன்

8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் கோரிக்கை
x
நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எட்டு வழி சாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கின்ற நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்கு தடை விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பது கண்டனத்துக்குரியது  எனவும் அவர்  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்