தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு
x
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன் வந்தார். ஆனால், அவரது முடிவை செயற்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தியே தலைவராக நீடிப்பார் என்றும், காங்கிரஸ் கட்சியை சீரமைக்க, ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். எதிர்கட்சி தலைவராக ராகுல் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய அவர், தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவரும் பொறுப்பேற்று கொள்வதாக குலாம்நபி ஆசாத்- தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்