மக்களவை தேர்தல் நிறைவு... 66.39 % வாக்குகள் பதிவு
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்தது. 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 மக்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி, மே 19ம் தேதி, 7வது கட்டத் தேர்தலுடன் முடிந்தது. இதில் 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது
ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி கட்டத் தேர்தலில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. கடைசி கட்ட தேர்தலில் 61 புள்ளி 85 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைத் தவிர தேர்தலை சுமுகமாக நடத்தி முடித்ததாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என்ற முடிவு வரும் 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
Next Story