கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்க தயாரா? - தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால்

தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
x
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சவால் விடுத்துள்ளார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், முன்பு ஒருமுறை வருமான வரி சோதனையின் போது, வீடு தமக்கு சொந்தமானது இல்லை, என கூறியவர் தம்பிதுரை என விமர்சித்தார். தம்பிதுரைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகவும் கூறிய அவர், அது தம்முடையது இல்லை என தம்பிதுரை நிரூபிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்