ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் - கமல்

கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கைதாகும் போது, அவர்களின் சொத்துக்களையும் கையகப்படுத்துவோம் என கமல் உறுதி தெரிவித்துள்ளார்.
x
அரசுப் பள்ளிகளை உலகத் தரத்துக்கு இணையாக மாற்றுவோம் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர், கவிஞர் சினேகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 30 ஆண்டுகள் தாமதமாக அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார். கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கைதாகும் போது, அவர்களின் சொத்துக்களையும் கையகப்படுத்துவோம் என்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற கமல், ஏரி, குளங்களை இளைஞர்கள் தூர்வார வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்