ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொள்வதை வைத்தே சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் - முதலமைச்சர்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து, அந்தியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
x
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து, அந்தியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும், மேலும் ஐந்து லட்சம் வேலைவாய்ய்ப்புகளை உருவாக்கப்படும் என்றும் கூறினார். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறும் ஸ்டாலின், பிரசாரத்தின் போது அவர் நடைப்பயணம் மேற்கொள்வதை வைத்தே சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்