தாமரைக்கு வாக்களியுங்கள்...சேவை செய்கிறேன்... - தமிழிசை

தமக்கு வாக்களித்தால் சேவை செய்வேன் என தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தமக்கு வாக்களித்தால் சேவை செய்வேன் என்று கூறிய தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை,  மற்றவர்களுக்கு வாக்களித்தால் திகாருக்கு சென்றுவிடுவார்கள் என்றார். திருச்செந்தூரை அடுத்த பழைய காயல், அகரம் பகுதிகளில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் இவ்வாறு கூறினார். பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தை கதை போல் விளக்கிய தமிழிசை, நாடும், வீடும் நலம்பெற தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நல்ல வரவேற்பு அளித்ததாக நன்றி தெரிவித்த தமிழிசை, ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கியும் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்