அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை, தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ
x
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.பி. பதவிக்கு போட்டியிட இதுவரை ஆயிரத்து 601 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதி எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட 519 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக கூறினார். ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 46 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறிய சத்யபிரத சாஹூ, வரும் 29ம் தேதிக்கு பிறகு சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்றார். அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் என்றும் சத்யபிரத சாஹூ கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்