"திமுக தேர்தல் அறிக்கை: விமர்சிக்கும் உரிமை பாஜகவுக்கு உள்ளது" - தமிழிசை

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவி்த்தார்.
x
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவி்த்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும், அதில் பெண் வேட்பாளர்களும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்