திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிப்பு

திமுக வேட்பாளர் பட்டியல், நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிப்பு
x
திமுக வேட்பாளர் பட்டியல், நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், திமுக 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விட்டு, எஞ்சிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதி என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. எனவே, கூட்டணி கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக வேட்பாளர் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. அதேநேரம், 18 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கையும் நாளை வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story

மேலும் செய்திகள்