தி.மு.க உத்தேசப் பட்டியல்...

தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
தி.மு.க உத்தேசப் பட்டியல்...
x
ம.தி.மு.கவுக்கு ஈரோடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல்லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூரும், காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி,  விருதுநகர், சேலம், ஆரணி, அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியின் தலைமையான தி.மு.க தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, திருச்சி, திண்டுக்கல், கரூர், தர்மபுரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்பு என தெரிகிறது. இதில் திமுக - காங்கிரஸ் இடையே மூன்று தொகுதிகளில் சிக்கல் தொடர்தாக கூறப்படுகிறது. இது உத்தேசப் பட்டியல் என்பதால், இதில் ஒரு சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்