கூட்டணி விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை...

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்றும் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை...
x
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வை சேர்க்க நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. பா.ம.க.வுக்கு இணையான அங்கீகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக இருப்பதே இந்த இழுபறிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில்,  பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ், தே.மு.தி.கவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். 

தேமுதிக கூட்டணி நிலைப்பாடு - நிர்வாகிகளின் மனநிலை என்ன?


தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு நிர்வாகிகள் மனதில் என்ன மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்