துரைமுருகன் வெளியே சொன்னது சரியல்ல - தம்பிதுரை

தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை துரைமுருகன் வெளியே சொன்னது தவறு என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கிளிக்கொடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை துரைமுருகன் வெளியே சொன்னது தவறு என கூறினார். இதன் மூலம் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பது தெரிய வந்துள்ளது என அவர் விமர்சித்தார். ஒரு கட்சி கூட்டணிக்குள் வந்தால் தான் வெற்றி என்ற நிலையில் அதிமுக இல்லை எனவும் தம்பிதுரை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்