தே.மு.தி.க இழுபறி ஏன்?

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
தே.மு.தி.க இழுபறி ஏன்?
x
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி விவகாரத்தில் அடுத்த நகர்வு குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மக்களவை தேர்தல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.கவுக்கு தர்மபுரி, ஆரணி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளை தே.மு.தி.கவிடம் கொடுக்க பா.ஜ.க வலியுறுத்துவதால் கூட்டணி முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. கிருஷ்ணகிரி, அரக்கோணம் யாருக்கு என்பதில் அ.தி.மு.க மற்றும் பா.ம.கவுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரக்கோணம் தொகுதியில் அன்புமணி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அதனால் அந்த தொகுதியை பெற பா.ம.க முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்