ஸ்டாலின் வீசுவது நிச்சயம் நோ பாலாக இருக்கும் : பொன்முடிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 03:38 PM
ஸ்டாலின் வீசுவது நோ பாலாகத்தான் நிச்சயம் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி, 'ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார்' என சட்டப்பேரவையில் நேற்று அதிமுக எம்எல்ஏ செம்மலை பேசியதை திமுக எம்எல்ஏ பொன்முடி சுட்டிக் காட்டி இன்று பேசினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வீசும் பந்து, ஆளுங்கட்சியை அவுட்டாக்கும் என பொன்முடி தெரிவித்தார். 
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ஸ்டாலின் வீசுவது நிச்சயமாக நோ பாலாகத் தான் இருக்கும் என கிண்டலாக கூறினார். அப்போது, அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு, எதிர்க்கட்சி தலைவர்,  மைதானத்துக்குள்ளேயே வராமல் பந்தை வீசிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.