"மகள் திருமணத்திற்கு திருநாவுக்கரசரே காரணம்" - ரஜினிகாந்த்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 07:41 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருநாவுக்கரசரை ரஜினி மற்றும் திருமாவளவன் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் - திருநாவுக்கரசர் - திருமா சந்திப்பு :

சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தனது  மகளின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்தார். இதையடுத்து, 3 பேரும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பேசினர். அப்போது, மூவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, திருநாவுக்கரசரை ரஜினி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் ரஜினி காந்தை சந்தித்ததால்தான் திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு:

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து, மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். 

அப்போது மகளின் திருமணத்திற்கு வருமாறு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக, போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மகளின் திருமணத்திற்கு, திருநாவுக்கரசர் உறுதுணையாக இருந்ததாகவும் எனவே அவருக்கு முதல் அழைப்பிதழை வைத்ததாக, கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2249 views

பிற செய்திகள்

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

27 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

410 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

17 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.