பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது - அமித்ஷா கருத்து

பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும், பயனற்ற அரசு தான் அமையும் என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது - அமித்ஷா கருத்து
x
பரம்பரை ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும், பயனற்ற அரசு தான் அமையும் என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கந்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி மூன்றாவது காந்தியையும் கொண்டு வந்துள்ள நிலையில், ஊழல் தான் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பின்னர், பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மேற்கு வங்கத்தை பொறுத்தவரை ஜனநாயகம் மீண்டும் மலரும் என்று மறைமுகமாக மம்தா பானர்ஜி அரசை அமித்ஷா விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்