"அதிமுக அரசு வழி தவறி செல்கிறது" - தினகரன்

"ஆட்சியாளர்கள் தங்கள் நலனை மட்டுமே பார்க்கின்றனர்"
x
ஜெயலலிதா மறைவுக்கு பிறகான தற்போதைய அதிமுக ஆட்சி, வழி தவறி செல்வதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் கட்சி கொடியை ஏற்றிவைத்து, மக்களிடையே பேசிய அவர், விவசாயிகள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு நலன்களையும் இந்த ஆட்சி புறந்தள்ளிவிட்டதாக குறை கூறினார். ஆட்சியாளர்கள், தங்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சி நடத்தி வருவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்