"கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சும் ஆடியோ உள்ளது" - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

"திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தியவர் ஸ்டாலின்"
x
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சும் ஆடியோ இருப்பதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,  தேர்தலை கண்டு பயமில்லை எனப் பேசும் ஸ்டாலின்தான், திருவாரூர் இடைத்தேர்தலை திட்டமிட்டு நிறுத்தினார் என்றார். தேர்தலை எப்படியாவது நிறுத்த கம்யூனிஸ்ட்  தலைவர்களிடம் அவர் கெஞ்சிய  ஆடியோ  அரசால் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்