எதிர்கட்சிகள் மாநாடு மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - திருமாவளவன்

தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் மாநாடு, மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி என்றார்.

Next Story

மேலும் செய்திகள்