பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மு.க.ஸ்டாலின், திமுக

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.கவுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டணி குறித்த, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடனான பிரதமர் மோடியின் காணொலி பேச்சு வியப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவாக்கியது போன்ற ஆரோக்கியமான கூட்டணி அல்ல தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் என்ற பிரதமர் மோடியின் பேச்சு, பிரசார யுக்தியை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைத்த  பா.ஜ.கவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்