பீட்டர் அல்போன்ஸை தலைவராக ஏற்க மாட்டோம் - கராத்தே தியாகராஜன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு, பதிலடி கொடுத்துள்ள கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு, பதிலடி கொடுத்துள்ள தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை - பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில், சுனாமி அஞ்சலி நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டால், 90 சதவீத தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்