வருகிற 24 - ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை

வருகிற 24 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் அவசரமாக கூடுகிறது.
x
மேகதாது, ஸ்டெர்லைட், பட்டாசு தொழிலாளர் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமா, கொள்கை முடிவு எடுப்பதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல், மேகதாது, ஸ்டெர்லைட் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 2019 ஆம் ஆண்டு புது வருடத்தில் தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. புது வருடத்தின் முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்