மேகதாது அணைக்கு அனுமதியா? மத்திய அரசுக்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம்

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக, கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்ற போராட்டம் திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
x
கர்நாடக அரசு காவிரியில் மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அண்மையில் அனுமதி வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, திருச்சி தென்னூர் உழவர் சந்தையில், இன்று மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன. திரளாக கூடியுள்ள தொண்டர்கள் மத்தியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்