"எதைப்பற்றியும் பேச அதிமுகவிற்கு தகுதியில்லை" - கனிமொழி குற்றச்சாட்டு

அதிமுகவிற்கு எதைப் பற்றியும் பேச தகுதி இல்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
x
அதிமுகவிற்கு எதைப் பற்றியும் பேச தகுதி இல்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருவதாகவும், இதற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் அதிமுகவுக்கு  எதைப் பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்